The last few days before the movie playback singer Suchitra attacked Dhanush himself a photograph published in his Twitter

கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா, தனுஷ் தன்னை தாக்கியதாக, ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

பின்னர், 2 நாட்களுக்கு முன் அனிருத், ஆன்ட்ரியா, தனியார் டிவி தொகுப்பாளர் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி ஆகியோரிடம் படத்தையும் வெளியிட்ட அவர், தனுஷின் லீலைகள் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சம்பவம், பெரும் பரபரப்பாக ஆனது. இந்த புகைப்படங்கள், அனைத்து தரப்பினர் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பல்வேறு பதிவுகளாக வலம் வந்தன.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் அருகே கற்பகம் அவென்யுவில் உள்ள பாடகி சுசித்ரா வீட்டுக் இன்று காலை தனுஷ் ரசிகர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதையறிந்ததும் செய்தியாளர்கள், சுசித்ரா வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்றும், தற்போது சுசித்ரா அடையாறில் இருப்பதாகவும் கூறினர்.