பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் இரண்டு நாட்களாக விளையாடி வந்த மணிக்கூண்டு டாஸ்க் முடிவுக்கு வந்தது. 5 அணியாக பிரிக்கப்பட்ட போட்டியாளர்களில் பாலா அணியினர் மட்டுமே மிகவும் மோசமாக விளையாடியதை பார்க்க முடிந்தது. அதிகமாக சென்ற நேரத்தை சரி செய்வதற்காக இப்படி விளையாடுவதாக பாலா வெளிப்படையாகவே கூறினார்.

இவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் விளையாடினர். இந்நிலையில் மணிக்கூண்டு டாஸ்கில் மிகவும் மோசமாக விளையாடி கடைசி இடத்தை பிடித்த, அணியை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார் பிக்பாஸ் இது குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

மணிக்கூண்டு டாஸ்கில் கடைசி இடத்தை பிடித்த, பாலாஜி அணியில் இருந்து இருவரைத் தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும்  ஒருமனதாக பாலாஜி மற்றும் சுசியை தேர்வு செய்கின்றனர், ரம்யா ஓரளவுக்கு விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருந்ததால் அவரை தப்பிக்க வைத்தனர்.

இதனை அடுத்து பாலாஜி மற்றும் சுசி பெயரை சக போட்டியாளர்கள் பிக்பாஸ் இடம் தெரிவித்ததை அடுத்து இருவரையும் ஜெயிலுக்கு அனுப்ப பிக்பாஸ் உத்தரவிட்டார். இதனை அடுத்து பாலாஜி மற்றும் சுசி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பாலாஜி உடன் எப்போதும் ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் ஷிவானி வருத்தப்பட, ’நீ ஏன் வருத்தப்படுகிறாய்? என்று பாலாஜி அவரை தேற்ற அங்கேயே ரொமான்ஸ் வழிகிறது. 

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ இதோ...