தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் நடித்து வருபவர் மாடல் நடிகை அக்ஷரா கவுடா. தமிழில் 'உயர்திரு 420' படத்தில் அறிமுகமான இவர், 'தளபதி' விஜய்யின் 'துப்பாக்கி' படத்தில் ஸ்பெஷல் அப்பீயர்ன்ஸ் கொடுத்திருந்தாலும், அக்ஷரா கவுடவை லைம் லைட்டுக்கு கொண்டுவந்தது என்னவோ 'தல' அஜித்தின் ஆரம்பம் படம்தான். 

இந்தப் படத்தில், 'ஸ்டைலிஷ் தமிழச்சியே' என்ற பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள். 
அதன்பின், ஜெயம்ரவியின் 'போகன்' படத்தில் நடித்த அக்ஷரா கவுடா, கடைசியாக 'மாயவன்' படத்தில் நடித்திருந்தார். 

சொல்லிக்கொள்ளும்படி தமிழில் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது கன்னடம், இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், அவ்வப்போது ஹாட்டாக ஃபோட்டோ ஷுட் நடத்தி அந்த கிளுகிளு புகைப்படங்களை சமூக வலைத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


அந்த வகையில், தற்போது செம ஹாட்டா பிகினி புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா கவுடா பகிர்ந்துள்ளார். அதனுடம், மேலும் பல புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 


தண்ணீரில் பூத்த செந்தாமரை போல், நீச்சல் குளத்தில் நீல நிற தண்ணீரில் கண்களுக்கு விருந்து படைத்திருக்கும் அக்ஷரா கவுடாவின் இந்த பிகினி புகைப்படங்கள்தான், தற்போது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த புகைப்படங்களைப் பார்த்து கிறங்கிப் போயிருக்கும் ரசிகர்கள், 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அக்ஷராவா இது! என அசந்துபோயுள்ளனர்.