இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தமிழ் சினிமாவில் சில படங்களில் இசை அமைத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார், இந்த நிகழ்ச்சிக்கு இவருக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இவர் நேற்று சமூக வலைத்தளமான பேஸ் புக்கில் தன் மகனுடன் +2 படிக்கும் சக மாணவன் மற்றும் அவனுடைய நண்பன் இறந்து விட்டான் என தெரிவித்தார்.
பின்பு அந்த சிறுவன் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் நொறுக்கு தீனியான சிப்ஸ் குர்குரே சாப்பிட்டுள்ளான். சில நேரங்களில் வயிறு வலி எடுத்து மிகவும் சிரமப்பட்டிருக்கிறான் அதனால் அவனுடைய பெற்றோர் ENO கொடுத்துள்ளனர், சில நிமிடங்களில் அவன் இறந்து விட்டான் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளர்.
இதனால் இது மாதிரியான தின் பண்டங்களை குழந்தைகள் சாப்பிட அனுமதிக்க வேண்டாம் என விழிப்புணர்வையும் கூறியுள்ளார்.
இது குறித்து பல நடிகர்கல் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை அதிகமாக பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கூறியுள்ளார்.
