பூசணிக்காய் உடைக்கும் நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது ‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் காட்சிகள்  வெகு சில நாட்களில் முடிவடைந்துவிடும். அதன் பின் போஸ்ட் ப்ரொடக்ஷனில் பின்னிப் பெடலெடுக்க காத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 

பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்ததுமே சில மாதங்கள் ரெஸ்ட் எடுப்பது ரஜினியின் ஸ்டைல். சில வருடங்கள் கூட ரெஸ்ட் எடுத்த காலங்கள் உண்டு. ஆனால் இப்போது செம்ம வயதான நிலையிலும் கூட அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிக் கொண்டிருக்கிறார் ரஜினி. கட்சி துவங்க வேண்டிய கட்டாயத்திலிருந்து எஸ்கேப் ஆவதற்கே இந்த ட்ரிக்! என்று சொல்லப்பட்டாலுமே கூட அதற்கெல்லாம் அலட்டிக்காமல் ரஜினியின் ஹீரோயிஸ பயணம் தொடர்கிறது.

தர்பாருக்கு அடுத்து தனுஷ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ‘கேஸ்டர்’ வாழ்வை அடிப்படையாக கொண்ட படத்தை தனுஷ் தயாரித்து நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் துவங்கியிருக்கிறது. அநேகமாக இதில் ரஜினியின் இரண்டாவது மருமகனான விசானும் நடிப்பார் போல் தெரிகிறது. இதற்காக விசாகனும், செளந்தர்யாவும் லண்டன் சென்றபோதுதான் அவர்களின் பாஸ்போர்ட்டுடன், சில லட்சங்கள் பணமும் களவு போயிருக்கிறது. 

அது இருக்கட்டும். அப்படியானால் ரஜினியின் அடுத்த படம்? ஆம், அது சிறுத்தை சிவாவுடன் தான். ஆக்சுவலாக கடந்த பொங்கலன்று வெளியான ரஜினியின் பேட்ட படத்துடன் மோதியது, சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம். இதில் எல்லா வகைகளிலும்  பேட்ட படத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டது விஸ்வாசம். சொல்லப்போனோல் ரஜினியின் மாஸ் டைட்டிலின் மீது விழுந்த பெரிய அடிதான் இது. ஆனால் அந்த ஈகோவையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சிவாவுக்கு கால்ஷீட் கொடுக்கிறார் ரஜினி. சிவாவும் செம்மத்தியாக ஒரு கதையை தயார் செய்து ரஜினிக்கு ஸீன் பை ஸீன் சொல்லியிருக்கிறார். 

கேட்டு ஹேப்பியான ரஜினி, இண்டர்வெல்க்கு பிறகான காட்சிகள் சிலவற்றில் மட்டும் சில கரெக்ஷன்களை சொன்னாராம். அது சிவாவுக்கும் பிடித்துப் போயிருக்கிறது. இந்த நிலையில், ரஜினியுடன் சிவா இணையும் இந்தப் படத்தின் கதை பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. இது வில்லேஜ் சப்ஜெக்ட் கதையாம். ரஜினி இப்படியான  முழு நீள வில்லேஜ் கதைகளில் நடித்து நெடுங்காலமாகிவிட்டது.

எனவே அவரும் ரெடி. ஏற்கனவே அஜித்தை வைத்து  வீரம் எனும் முழு நீள வில்லேஜ் சப்ஜெக்ட்டையும், விஸ்வாசத்தின் பெரும் பகுதி வில்லேஜிலுமாக அதிரிபுதிரி ஹிட்டுகளை கொடுத்தவர் சிவா. கிராமத்து மாஸ் கதைகளெல்லாம் சிவாவுக்கு கேக்கில் ஒயின் ஊற்றி பிசைந்து சாப்பிடுவது மாதிரி. ஆக இந்தப் படம் டபுள் விஸ்வாசம் போல் டபுள் மரணமாஸாக இருக்கப்போகிறது! என்கிறார்கள். பார்க்கத்தானே போறோம்!