'ஜுராசிக் பார்க்', 'வார் ஆப் தி வால்ட்' உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களை இயக்கி உலக அளவில் புகழ் பெற்றவர், பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.  

இவருடைய மகள் மைக்கேலா கடந்த மாதம், ஆபாச படங்களை தயாரித்து அதில் நடிக்க உள்ளதாக கூறி அனைவரையும் அதிரவைத்தார். மேலும் இவரின் இந்த முயற்சிக்கு தந்தை ஸ்டெபன் பீல்பேர்க் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, மைக்கேலாவை போலீசார் திடீர் என கைது செய்து, பின் விடுவித்துள்ளனர். ஆனால் இதுவரை ஏன் அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை. 

ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக மைக்கேலா கைது செய்யப்பட்டதாக ஹாலிவுட் திரையுலகத்தில் கூறப்படுகிறது.  இது குறித்து தெரிவித்துள்ள மைக்கேலாவின் ஆண் நண்பர், தவறுதலாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப் பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.