இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள திரைப்பிரபலங்கள் புதுசு, புதுசாக சவால்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா ட்விட்டர் மூலம் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலிக்கு சவால் ஒன்றை விடுத்தார். 

இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!

#BetheREALMAN என்ற ஹேஷ்டேக் மூலம் உண்மையான ஆண் தன்னுடைய மனைவியை இந்த சமயத்தில் வீட்டிற்குள் தனியாக வேலை செய்ய விடமாட்டார். மனைவிக்கு வீட்டுவேலையில் உதவி செய்யுங்கள் என்று கூறியிருந்தார். அந்த சவாலை ஏற்ற ராஜமெளலி வீட்டை பெருக்குவது, துடைப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள ராஜமெளலி, தனது ஆர்ஆர்ஆர் படத்தின் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார். தற்போது தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமெளலி ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து “ஆர்ஆர்ஆர்” (ரத்தம் ரணம் ரெளத்திரம்) என்ற படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் படம் உருவாகிவருகிறது. 

இதையும் படிங்க: அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...!

நல்ல ஆண் மகனாக வீட்டு வேலையில் உங்களது மனைவிக்கு  உதவுங்கள் என்று #BetheREALMAN என்ற ஹேஷ்டேக் மூலம் சவால் விட்டுள்ளார். என்னடா இது தெலுங்கு சூப்பர் ஸ்டார்களை பார்த்து இப்படி ஒரு சவால்  விட்டிருக்காரே நம்ம ராஜமெளலி என தெலுங்கு வாலாக்கள் எல்லாம் வாய்பிளந்து நிற்க. சத்தமே இல்லாமல் முதல் ஆளாக சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ஜூனியர் என்.டி.ஆர். வீட்டு வேலை செய்யும் வீடியோவை பார்க்க ரசிகர்கள் மரண வெயிட்டிங்.