இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சூரரை போற்று' திரைபடம் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் தற்போது படக்குழு இறங்கியுள்ளது. சமீபத்தில் இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா இரண்டாவது அலை தற்போது தணிந்துள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது சூர்யா நடித்து வரும் 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, நாளை 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், இன்னும் பெயரிடாத படமான 'சூர்யா 40 ' படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலைக்கு பின்னர் ஜூலை 13 ஆம் தேதி துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே 'வாடி வாசல்' படத்தின் படடப்பிப்பு தூங்கிவிட்ட நிலையில் நாளை... மீண்டும் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு, வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.