‘நான் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தால் எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்திருந்தாலும் நடிகை தமன்னாவையே திருமணம் செய்திருப்பேன்’ என்று பேரதிர்ச்சி அளிக்கிறார் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன்.

கடந்த இரண்டு வருடங்களாகவே நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தனது வெளிநாட்டுக் காதலருடன் இசை ஆல்பங்களில் மட்டுமே மூழ்கித் திளைத்துவரும் ஸ்ருதிஹாசன் மீண்டும் ஒரு இந்திப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் ஒப்பந்தமாவது தொடர்பாக மும்பைக்குச் சென்ற அவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டு பேசியபோது தனது இளம் வயதுத் தோழியான நடிகை தமன்னா குறித்துப் பேசிய போது காதல் ரசம் வழியப் பேசினார். ‘எனக்குத் தெரிந்து பெண்களில் பேரழகி என்றால் அது தமன்னாதான். நான் மட்டும் ஒரு ஆணாகப் பிறந்திருந்தால் அவரைக் காதலித்துத் திருமணமும் செய்திருப்பேன்’ என்று தனது காதலைப் போட்டு உடைத்தார் ஸ்ருதிஹாசன்.

நடிகை ஸ்ருதி தமன்னா ஆகிய இருவருமே இன்னும் திருமணம் ஆகாதவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தேவையில்லாத சமாச்சாரம்.