கடந்த இரண்டு நாட்களாக, நடிகை நயன்தாரா குறித்து பட விழா ஒன்றில், சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் நடிகர் ராதாரவி பேசியது தான், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி விஷயத்திற்காக வாய் திறக்காத பலர் நயன்தாராவுக்காக வரிந்து கட்டி வருகிறார்கள்.

மேலும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில், ராதாரவியை... திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியதாக அறிவித்தது. இதை தொடர்ந்து ராதாரவி தானே விலகி கொள்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டியும் இதுகுறித்து தனது கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில் "நயன்தாரா ஒரு கண்ணியமான பெண்  அதனால் அவர் அமைதியாக இருக்கிறார்.  ஆனால் நான் அப்படி இல்லை கொடூரமான பெண்.  இந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டால் நேராக சென்று அறைந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி இப்படி  பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.