ஒரு பேஸ்புக் பக்கத்தை வைத்து கொண்டு, ஒட்டு மொத்த திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை கதி கலங்க வைத்தவர், நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு கொடுப்பதாக ஏமாற்றிய பல பிரபலங்கள் பெயரை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்தார்.

இவர் வெளியிட்ட பட்டியலில் பல முன்னணி நடிகர்கள் அடங்குவார்கள். கடந்த வாரம் கூட பிரபல முன்னணி தெலுங்கு பட இயக்குனர் கொரட்டல சிவாவின் பெயரையும் அவருடன் எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படத்தையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக போய் கொண்டு இருந்தாலும், மற்றொரு புறம் தமிழில் இவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் மூலம் பல பிரபலங்களின் சுயரூபம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

இந்நிலையில் திரிஷாவின் முத்த புகைப்படத்தை வெளியிட்டு, வலிய சென்று வம்பிழுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதாவது தற்போது, பேஸ்புக் பக்கத்தில், ராணா-திரிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும், ராணாவின் தம்பி ஸ்ரீரெட்டிக்கு கொடுத்த முத்த புகைப்படத்தையும் ஒன்றாக சேர்ந்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவும் பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித் தான்  என்றும் கூறி புதிய திரியை கொளுத்தி போட்டுள்ளார். இது எங்க போய் முடிய போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.