கடந்த வாரம் ரிலீஸான செல்வராகவன் சூர்யா கூட்டணியின் ‘என்.ஜி.கே’படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உலகின் அத்தனை ஜனங்களும் தூற்றிவரும் நிலையில், சர்ச்சைக்குப் பேர்போன நடிகை ஸ்ரீரெட்டியும் தன் பங்குக்கு அப்படத்தின் ஹீரோயின் ரகுல் பிரீத் சிங் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்.

கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் தமிழ், கொஞ்சம் சினிமா கொஞ்சம் அரசியல் என்று பார்ட் பார்ட்டாகப் பிரித்து பதம் பார்த்து வரும் ஸ்ரீரெட்டிக்குக் கடைசியாக பலிகடா ஆகியிருப்பவர் ‘என்.ஜி.கே’படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங். படத்தில் இருவருடைய நடிப்புமே சகிக்கவில்லை. குறிப்பாக மலர் டீச்சராக மனதைக் கவர்ந்த சாய் பல்லவியை சகிக்க முடியவில்லை என்பது பொது ஜனங்களின் கருத்து.

ஆனால் அதற்கு நேர்மாறாக சாய் பல்லவியை புகழ்ந்து தள்ளியுள்ள ஸ்ரீரெட்டி, ரவுடி பேபி சாய் பல்லவி பின்னிட்டார். ஆனால் ரகுல் பிரீத் சிங் ரொம்ப ஒர்ஸ்ட்.படத்துக்குப் பெரிய மைனஸ். அவரைப் பார்த்தாலே குமட்டிக்கிட்டு வாந்தி வருது’ என்று மகா மட்டமாக பதிவிட்டிருக்கிறார். ரகுல் தரப்பிலிருந்து ஒரு ஏவு கணைத் தாக்குதலை மிக விரைவில் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.