கோலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பற்றி தொடர்ந்து பாலியல் குற்றங்களை முன் வைத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி.

 

ஏற்கனவே இவர் தெலுங்கு நடிகர்கள் பற்றி பாலியல் குற்றங்களை முன் வைத்த போது இவருடைய குற்றங்கள் எதையும் தெலுங்கு திரையுலகம் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தற்போது தமிழ் பிரபலங்கள் சிலரது பெயரை வெளியிட்ட போதிலும், நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 'சிவா மனசு புஷ்பா' படத்தை இயக்கி நடித்துள்ள இயக்குனர் வாராகி. நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு விபச்சார நோக்கத்தில் பழகி உள்ளதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். 

இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது மலையாள தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்ட போது திரையுலகமே ஒன்று திரண்டு அவருக்கு ஆதரவாக போராடியது. ஆனால் நான் யாருடைய ஆதரவும் இன்றி தனி மனுஷியாக நின்று போராடி வருகிறேன்.

என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. அனைவரும் என்னை ஒரு விபச்சாரம் செய்யும் பெண் போல் சித்தரித்து வருகின்றனர். இதனால் எனக்கு தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் தான் வருகிறது. 

முடிந்தவரை போராடுவேன்... நீதி கிடைக்காத பட்சத்தில் என் இறுதி முடிவாக தற்கொலை தான் இருக்கும். இதை தவிர வேறு வழியில்லை' என அழுது கதறியுள்ளார்.