பல பிரபலங்களை உருவாக்கி வரும், பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி தன்னை ஏமாற்றி விட்டதாக ஆதங்கத்தோடு கூறியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீபிரியா.

விஜய் டிவி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்தையும் அவ்வப்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான். 

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களை ட்விட்டர் மூலம் வறுத்து எடுத்தவர் என்றும் கூறலாம்.

இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வந்த இவர் தற்போது இந்த நிகழ்ச்சி மீதும், இந்த தொலைக்காட்சி மீதும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், நான்காவது வாரத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படும் ஐஸ்வர்யாவை தொடர்ந்து பிக்பாஸ் காப்பாற்றி வருகிறது. ஐஸ்வர்யாவை காப்பற்ற, தற்போது பிக்பாஸ் யாஷிகாவை வெளியேற்றியுள்ளது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

யாஷிகாவின் வெளியேற்றம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் அல்ல, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் விஜய் டிவி தன்னை ஏமாற்றி விட்டதாக மிகவும் வருத்தத்துடன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ரீபிரியா.