பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எப்படியும் இந்த வாரம் வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இவர் நிகழ்ச்சி ஆரம்பமானத்தில் இருந்தே அசிங்கமான வார்த்தைகளால் ஓவியாவை திட்டியும், மற்றவர்கள் மேல் உபயோகித்தும் வந்தார்.

இவர் இப்படி செய்ததால் இவர் மேல் புகார்களும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இவர் இப்படி பேசுவதால் பல முறை இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது நாகரீகம் இல்லை என கூறியும். என்னை கேட்க கமலஹாசன் யார் என்னை என் அம்மா மட்டும் தான் கேட்க உரிமை உண்டு என முதுகிற்கு பின்னால் சென்று பேசியவர்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் நாமினேட் செய்யப்பட்டிருந்த இவர், ஒரு போட்டியில் வெற்றிபெற்றதால், இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார் என அறிவிக்கப்பட்டார். 

இதனால் எப்படியும் இந்த வாரம் காயத்ரி வெளியேறிவிடுவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக, மக்களோடு மக்களாக பேசுகிறேன் என ஸ்ரீ பிரியா கூறினார். இதற்கு கமல் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மட்டும் தான் நான், முடிவு பிக் பாஸ் கையில் தான் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் உங்களுக்கு உள்ள சந்தேகம் தனக்கும் உள்ளது, இதற்கான விடை தனக்கும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என பிக் பாஸ்ஸிடம் கேட்டதால், பிக் பாஸ் குரல் இவர்களுக்கு விளக்கமளித்தது. அதில் பிக் பாஸ் விதிமுறையின் படி பிக் பாஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வெளியே அனுப்பலாம். வெளியேறியவர்களை உள்ளே கொண்டு வரலாம். இது ஒரு போட்டி என்பதால் கொடுக்கப்பட்ட டாஸ்கில் வெற்றி பெற்றதால் மட்டுமே இவர் இந்த வாரம் எலிமினேட் ஆக வில்லை என்பது போல் விளக்கம் கொடுத்தது.