sripriya advise big boss contestants
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் அனுயாவைத் தவிர்த்து, மற்ற போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வெளியில் சொல்லும் போது, மற்ற போட்டியாளர்கள் தேம்பித்தேம்பி அழுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வையாபுரி வெளியேறிய போதும், சினேகன், பிந்து மாதவி ஆகியோர் அழுது தீர்த்தனர்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியுள்ள நடிகை ஸ்ரீப்ரியா... உள்ளே இருந்து வெளியே வரும் அனைத்து போட்டியாளர்களும் நேரடியாக நிலவிற்கா செல்லப் போகின்றனர். வீட்டிற்குத் தானே! நீங்களும் வெளியில் வந்ததும் அவர்களை போய் சந்தித்து உங்கள் நட்பை வளருங்கள். அதை விட்டு விட்டு ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள் என போட்டியாளர்களுக்கு செம மொக்கை கொடுத்துள்ளார்.
Dnt understand Y cry@ppl who r getting evicted,like they r going straight2moon!its all going2come2an end soon&can meet and b friends again
— sripriya (@sripriya) September 17, 2017
