Asianet News TamilAsianet News Tamil

கல்வி மோசடியில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி... கைது செய்ய வாய்ப்பு...

srikanth wife vanthana issue
srikanth wife-vanthana-issue
Author
First Published Mar 28, 2017, 2:32 PM IST


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர்  ஸ்ரீகாந்த் இவரது மனைவி  வந்தனா, அவருடைய தந்தையுடன் இணைத்து ஊட்டியில் மெட்ரிக் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்கிற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த கல்வி நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதே போல் வருடம் தோறும் பலர் தங்களது படிப்பை முடித்து நல்ல எதிர்காலம், வேலை கிடைக்கும் என நம்பி வெளியே வருகின்றனர்.

அவர்களது கனவுகளை கானல் நீராக்கும் விதமாக தொடர்ந்து பல கல்விக்கொள்ளைகை அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.

இந்த கல்வி மோசடியில் தான் சிக்கியுள்ளார், நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா மற்றும் அவரது தந்தை சாரங்கபாணி.

இந்த கல்லூரியில் படித்த, பிரிதிவிராஜ் என்கிற மாணவர் 2012 ஆம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தல் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தான் மெட்ரிக் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து விட்டு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு சென்ற போது தனக்கு வழங்க பட்ட பட்டம் போலி என கூறி தன்னை நிராகரித்து விட்டதாகவும்.

இதனால் இதனை உறுதி செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழகம் சென்று விசாரித்த போது அங்கும் இதனை போலி என கூறியதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகார் சம்மந்தமான வழக்கு பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஒரு முறை கூட இந்த கல்வி நிறுவனத்தின் உரிமையாளர்களான  வந்தனா மற்றும் அவரது தந்தை  சாரங்கபாணி ஆஜராகவில்லை.

இந்நிலையில் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால்  இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகயில்லை என்றால், கைது செய்யப்படுவார்கள் என்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவுறுத்தி இருந்ததால் வந்தனா மற்றும் அவரது தந்தை இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி 18 தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் வந்தனா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பிரிதிவிராஜ், பலரது வாழ்க்கையை இந்த நிறுவனம் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது என்றும், பணம் சம்பாதிக்க வேண்டும் என இது போன்ற அனுமதியில்லாமல் நடந்து வரும் கல்வி நிறுவனங்களை உடனடியாக  மூட வேண்டும் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios