தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் ஸ்ரீகாந்த், நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்க வில்லை. மேலும் சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் இவருடைய நடிப்பில் ராக்கி என்ற நாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ராக்கி' படம் உருவாகியுள்ளது. இதில் ஸ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு நாய் பழிவாங்கும் இந்த த்ரில் படத்திற்கு டீசர் ரிலீசுக்கு பின் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்  ஈஷான்யா மகேஸ்வரி, நாசர், பிரம்மானந்தம், சாயாஜி ஷிண்டே, ஓ.ஏ.கே சுந்தர், கராத்தே ராஜா மற்றும் ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கே.சி.பொகடியா இயக்கியுள்ளார்.