ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே மும்பை செல்வதாகவும் இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் எனவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார். 

தன் உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றிந்தார். 

அப்போது மாரடைப்பின் காரணமாக திடீரென ஸ்ரீதேவி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் கமலும் மும்பையில் நடக்கும் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கமல் புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே மும்பை செல்வதாகவும் இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன், இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்தார்.