திருமணம் முடிந்து அனைத்து உறவினர்களும் இந்தியா திரும்பிவிட்ட நிலையில் ஸ்ரீ தேவி குடும்பத்தினர் மட்டும் இந்தியாவுக்கு திரும்பாமல் துபையில் உள்ள பிரபல எமிரேட்ஸ் டவர் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர்.

மர்ம மரணம்:

இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவி, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு குளியல் அறையில் மயங்கி விழுந்து மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று மது போதையில் நிலை தடுமாறி தண்ணீர் தொட்டியில் விழுந்து ஸ்ரீ தேவி மரணமடைந்ததாக கூறப்பட்டது.

சந்தேகம்:

நேற்றைய தினமே நடிகை ஸ்ரீ தேவியின் உடல் இந்தியா வந்தடையும் என கூறப்பட்ட நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணை நீடிப்பதால் மும்பை கொண்டுவருவதில் தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.

போனி கபூரிடம் விசாரணை:

நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணைய செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் இந்த விசாரணையை துபாய் போலீசார் மேலும் தீவிரப்படுத்தி, Dubai Public Prosecution-க்கு மாற்றியுள்ளனர்.

கைது:

துபாய் போலிஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வரும் ஸ்ரீ தேவி குடும்பத்தினர் கொடுக்கும் வாக்கு மூலம் தெளிவாகவும் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைந்தால் மட்டுமே ஸ்ரீ தேவியின் உடலை உடனடியாக இந்தியா கொண்டு செல்ல துபாய் அரசு அனுமதிக்கும் என்றும் சந்தேகம் ஏற்ப்படும் வகையில் அமைத்தால் போனி கபூர் கைதாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.