ஒரு காலத்தில் பாலிவுட், கோலிவுட் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 

இவர் கடந்த 24 தேதி துபாயில் உள்ள பிரபல ஓட்டலில் பாத் டாப்பில் மூழ்கி மரணமடைந்தார். 

இந்நிலையில் சென்னையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் ஸ்ரீதேவிக்காக அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் சென்னை வந்துள்ளனர். 

சென்னை வருவதற்காக மும்பை விமான நிலையம் வந்த ஜான்வி, மற்றும் குஷியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.