நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி,  தற்போது 'தடக்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரர், இஷான் கட்டார் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண்ஜோஹர் தயாரிக்கிறார். 

ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீதேவி மரணத்தினால் முடிக்க வேண்டிய நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போனது.

மெல்ல மெல்ல தன்னுடைய அம்மாவின் மரணத்தில் இருந்து மீண்டு சகஜநிலைக்கு திரும்பும் ஜான்வி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஜான்வி கபூர் இஷனை தன்னுடைய மடியில் அமர வைத்திருப்பது போல் ஒரு புகைப்படமும், அவருக்கு தலை முடியை சரி செய்வது போல் மற்றொரு புகைப்படமும் வெளியாகியது.

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து கூறியுள்ள படக்குழுவினர் ஜான்வி கபூர் அனைவருடனும் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர். இஷனுடன் தோழமையாக மட்டுமே பழகி வருவஹாக தெரிவித்துள்ளனர்.