வசந்த மாளிகை உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் ஸ்ரீ தேவி.

தன்னுடைய கதாநாயகி பயணத்தை மங்களகரமாக மூன்று முடிச்சி என்ற படத்தில் துவங்கினார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்... 16 வயதினிலே படத்தில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிப்பட நடிகையாக வீறு நடைப்போட துவங்கினார்.

80களில் முன்னணி நடிகராக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் தமிழில் நடித்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் நிலையான இடத்தை பிடித்த ஸ்ரீ தேவி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை என்று பெயர் பெற்றது மட்டும் இன்றி லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். போனி கபூரை திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரீ தேவி தன்னுடைய கணவரை கடைசி வரை காதலித்தார் என்பது இவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட திருமணத்தில் கணவருடன் கட்டித்தழுவி நடனமாடியத்தில் இருந்தே பலருக்கும் தெரியும். 

கடைசி வரை சிறந்த தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுடைய திருமணம் பிரபல நடிகர் விஜயகுமார் வீட்டில் தான் நடந்ததாம். இதனை ஒரு பேட்டியின் போது விஜயகுமார் கூறியுள்ளார். மேலும் நெருங்கிய குடும்ப நண்பர் போல் பழகியவர் ஸ்ரீதேவி என்பதையும் விஜயகுமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.