ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.  திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்தினார். மேலும் ராணாவின் தம்பியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே போல் கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். 

கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால்,  முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார். அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, தற்போது நடிகைகளையும் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டார். சமந்தா, த்ரிஷா, தமன்னா என முன்னணி நடிகைகளை தேடி, தேடி வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி. இப்போது தற்போது மிகவும் இனிமையாக ராணாவிற்கு தன்னுடைய வாழ்த்துக்ககளை தெரிவித்துள்ளார்.

நடிகர் ராணா கடந்த இரு தினங்களுக்கு முன், பிரபல மாடலும், தொழிலதிபருமான மிகிக்கா பஜாஜ் என்பவர் தன்னுடைய காதலை ஏற்று கொண்டதாக அறிவித்தார். இதனால் 35 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்த ராணாவிற்கு எப்படியும் இந்த வருடம் திருமணம் நடத்த அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், தமிழ், தெலுங்கு  திரையுகளை சேர்ந்த பலர் இவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நடிகை ஸ்ரீரெட்டியும், ராணாவின் வாழ்க்கை அமைதியாகவும் அழகாவும் துவங்கட்டும் என தெரிவித்துள்ளார். ராணாவின் தம்பியுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி இப்படி வாழ்த்து தெரிவித்துள்ளது தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.