தெலுங்கு சினிமாவில்  ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி  படுக்கை அறைக்கு அழைத்து பாலியல் லீலைகள் கொடுத்ததாக பட்டியலிட்டதால் தெலுங்கு திரையுலகம்  அலண்டுப் போனது. தற்போது அதே போல தமிழ் திரையுலகமும் பரபரப்புக்கு தயாராகி வருகிறது.

படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப் படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். 

இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தின் தலையீட்டால் ஸ்ரீரெட்டி படங்களில் நடிக்க விதித்திருந்த தடையை நீக்கி ஸ்ரீரெட்டி தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என்று தெலுங்கு நடிகர் சங்கம் அறிவித்தது.

தெலுங்கு திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்ததால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் நேற்று ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழ் பட இயக்குநர் “முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை. நீங்கள்கூட ஒரு பெரிய மனிதர்” என குறிப்பிட்டு இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார்.

5 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது பார்க் ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஞாபகம் இருக்கா மிஸ்டர் ஸ்ரீகாந்த்...? நீ எனது அந்த ___________ சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து... என்னுடன் டான்ஸ் ஆடும் போது எனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னாயே.. ஞாபகம் இருக்கா... என தனது பதிவில் தெளிவாக அந்தரங்க செயலை பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், “இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் சினிமாவிற்கான நேரம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்