தென்னிந்தியா சினிமாவை தனது அதிரடியான பாலியல் குற்றச்சாட்டுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், முன்னணி நடிகர் இயக்குனர்களை நடுநடுங்க வைத்தவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி. தொலைக்காட்சிகள், சமூகவலைத்தளங்களிலும் தன்னை ட்ரெண்டிங்கில் வைத்திருந்தார். அதன்பின் தற்போது தன்னுடைய வாழ்க்கை வரலாறு படம் உள்பட தமிழ் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.  

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் ஒரு உருக்கமான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியபோது, 'தன்னுடை பிறப்பை நினைத்து தானே வேதனைப்படுவதாகவும், தன்னை போன்ற ஒரு பெண்ணுக்கு, வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள். என்றும், தன்னை பெற்றது ஒன்றுதான் தனது தாயார் செய்த தவறு என்றும், அவருக்கு தான் கொடூரமான தண்டனை கொடுத்துவிட்டதாகவும், தான் செய்த தவறுக்காக தனது தாயார் எல்லோரிடமும் திட்டு வாங்கி வருவதாகவும், தாயார் கொடுத்த இந்த உடம்பையும், இந்த உயிரையும் எடுத்து என்னை கொலை செய்துவிடுங்கள் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது முகநூலில் பிரேக்கிங் நியூஸ் கொடுத்துவந்த ஹாட் டால் ஸ்ரீ ரெட்டி, முதல் முறையாக அதுவும் அன்னையர் தினத்தில் இப்படியான உருக்கமான பதிவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.