sri reddy raised a questions to nani regarding her sexual relationship

ஸ்ரீரெட்டி கேட்ட ஒரே ஒரு கேள்வி..! வாயடைத்து போன நானி...ஆட்டம் காணும் தெலுங்கு திரை உலகம்...!

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில், தன்னுடன் சில நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய உடன், ஆதாரத்துடன் சில வீடியோக்களையும் புகைப்படத்தையும் வெளியிட்டு, திரைத்துறையினரை அதிர வைத்தார்.

இதற்கு அடுத்த படியாக, அடுத்து வேறு யாருடைய புகைப்படத்தை அவர் வெளியிடுவாரோ என பயந்து ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு மறுக்கப்படாது என தயாரிப்பாளர் சங்கம் முதல் அனைவரும் ஒரு படி கீழே இறங்கி வந்தனர்

இந்த வரிசையில் தற்போது தெலுங்கில் பிக்போஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நானி பெயரும் இடம் பெற்று உள்ளது என்பது தான் ஐலைட்

மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டியும் கலந்துக் கொள்ள உள்ளார். நிகழ்ச்சியின் நடுவே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியினுள் செல்ல உள்ளார்

இதற்கிடையில், ஸ்ரீ ரெட்டி தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் ஸ்ரீ ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்

இதனை தொடர்ந்து, இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஸ்ரீ ரெட்டி நானிக்கு சவால் விடுத்துள்ளார்

அதில்,

"நீ ஒருத்தருக்கு பிறந்திருந்தால், உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என நீ விரும்பினால் நீ என்னுடன் படுக்கையை பகிரவில்லை என உன் குடும்பத்தார் மற்றும் உன் மீது சத்தியம் செய்து பார்ப்போம்’...இல்லையென்றால் நான் சாபம் விட்டு விடுவேன் எனவும் தெரிவித்து உள்ளார்

முன்பெல்லாம் எது நடந்தாலும் வெளியில் தெரிந்தால் அசிங்கம் அவமானம் என பெண்கள் மிகவும் பயந்து வாழ்ந்து வந்தனர்

ஆனால் தற்போதைய நிலையில், பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு தீர்வு காண ஒரு படி முன்னேறி உள்ளனர் பெண்கள்...

பாலியல் தொந்தரவை சந்திக்கும் பெண்கள் பப்ளிக்கில் தெரிவிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமையவும் செய்கிறது

இந்த விவகாரம் தான் தற்போது தெலுங்கு பட உலகில் ஹாட் டாப்பிக்காக உள்ளது