Sri Reddy Met Top Director AR Murugadoss in Hotel

பாவம் அந்த மனுஷன் அவருக்கு இருக்கிற பிரச்சனை பத்தாது என்பதற்காக லீக்ஸ் புகழ் ஸ்ரீ ரெட்டி வேற தனது ஃபேஸ்புக்கில் தமிழ் சினிமாவிற்கு ஷாக் கொடுக்கும் ஒரு போஸ்டரை போட்டுள்ளார்.

விஜயை வைத்து "சர்கார்" படத்தை இயக்கிவரும் முருகதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார். அந்த போஸ்டரில் விஜய் தம்மடித்தது பெரிய பிரச்சனையாகியுள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸிடம் தலா ரூ. 10 கோடி கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு அவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. போஸ்டரில் உள்ள சிகரெட் காட்சிக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா? என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

சர்கார் பிரச்சனையால் பயங்கர அப்செட்டில் இருக்கும் முருகதாஸ்க்கு தெலுங்கு திரையுலகை அதிர வைத்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஷாக் போஸ்ட் போட்டுள்ளார்.

"ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி...நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய....இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை...நீங்களும் சிறந்தவர் சார்..." ஆனால், நமக்கு இடையே நிறைய என்று கூறி அந்த வாக்கியத்தை முடிக்காமல் புள்ளிகள் மட்டும் வைத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டி ஒரு வில்லங்க பார்ட்டி என்பதால் ஆளாளுக்கு யூகிக்கத் துவங்கிவிட்டனர். 



தமிழ் இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என் ஏற்கனவே சொல்லியிருந்த நிலையில் ஸ்ரீ ரெட்டி முருகதாஸ் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று போஸ்ட் போட்டு தமிழ் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார்.