திரைப்பட வாய்ப்பு கிடைத்ததும், சைலண்டாக ஆகிவிட்டாரே ஸ்ரீ லீக்ஸ் நடிகை ஸ்ரீரெட்டி, என அனைவரும் நினைத்த நிலையில், தற்போது யாரும் சற்றும் எதிரப்பார்க்காத ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கினார். 

தெலுங்கு திரையுலகினரை கலங்கடித்துவிட்டு சிறிது இடைவேளிக்குப் பின், தமிழ் திரையுலகினரை டார்கெட் செய்த ஸ்ரீரெட்டி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றம்சாட்டி தமிழ் திரையுலகில் அதிர்வடைய வைத்தார்.

இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமைகளை ‘ரெட்டி டைரி’ என்று படமாக எடுக்கப்போவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்து பரபரப்பு கிளப்பினர். 

இந்நிலையில் தற்போது, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என பலரால் பார்க்கப்படும்  டெண்டுல்கர் மீது ஸ்ரீரெட்டி புகார் சுமத்தியது, சச்சின் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இது தொடர்பாக ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது...

ரொமேண்டிக் நபரான சச்சின், ஹைதராபாத் வந்தபோது ஒரு சார்மிங் என்கிற பெண்ணுடன் ரொமான்ஸ் செய்தார். அதற்கு உயரிய பதவியில் உள்ள ஒரு சாமுண்டீஸ்வரி சுவாமி உதவினார். சிறப்பாக விளையாடும் வீரர் ரொமான்ஸிலும் நன்றாக விளையாடுவாரா? என்று சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல நடிகர்கள் மீது ஆதாரம் இல்லாமல் புகார் கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது இவர் பிரபல கிரிக்கெட் வீரர் மீதும் ஆதாரம் இல்லமால் இது போன்ற புகாரை கூறியுள்ளது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.