சிம்புவுக்கு கொக்கி போட்ட ஸ்ரீ ரெட்டி..! மனைவியாக வர என்ன தகுதி வேண்டும்..? 

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் படுக்கைக்கு அழைப்பதாக, நடிகை ஸ்ரீ ரெட்டி பல  நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் மீதும் பெயர் பட்டியல் போட்டு தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பதிவிட்டு வந்தார்.
 
இந்நிலையில் இவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு கொடி காண்பித்தாலும், சினிமா துறை மட்டும் இவரை எதிரி போன்றே பார்த்தது.. அதற்கு காரணம் ஸ்ரீ ரெட்டி சொல்வது உண்மை என்பதோ அல்லது இல்லை என்பதோ...அதை பொறுத்தே எடுத்துக்கொள்ள முடியும்.

தமிழ் சினிமாவில் லாரன்ஸ், ஸ்ரீ காந்த், ஏ. ஆர் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் மீது தொடர் குற்றச்சாட்டை  வைத்து வந்த ஸ்ரீ ரெட்டி, தற்போது நடிகர் சிம்புவிடம் ஒரு கேள்வியை கேட்டு அவரையே வெட்கப்பட  வைத்துவிட்டார்.

அதாவது, நடிகை ஸ்ரீ ரெட்டி சிம்புவிடம் வீடியோ மூலம், உங்களுக்கு மனைவியாக வரும் பெண்ணிடம் என்ன தகுதிகளை எதிர்பார்ப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு ஒரு நிகழ்ச்சியில், ஸ்ரீ ரெட்டி வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது சிம்பு பதில்  அளித்துள்ளார். சிம்பு தெரிவிக்கும் போது, "எனக்கு மனைவியாக வரப்போறவங்க.. ஒரு பெண்ணாக இருந்தால் போதும் என தெரிவித்து இருந்தார். 

மேலும், பெண்ணியம் பற்றி மிக சிறப்பாக பேசி உள்ளார் நடிகர் சிம்பு... ஒரு பெண் என்பவள் ஆண்களுக்கு  இணையாக செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு தேவை இல்லாததை செய்வதை விட, ஒரு  பெண்ணாக செய்ய வேண்டிய விஷயத்தை செய்யும் போது அதற்கு தடை இருந்தால், அதில் போராடி வெல்ல வேண்டும்.. அதுதான் பெண்ணியம் என நடிகர் சிம்பு தெரிவித்து உள்ளார்.

மேலும், ஸ்ரீ ரெட்டியின் இந்த கேள்விக்கு சிம்பு பதில் அளிக்கும் போது ஒரு நிமிடம் யோசனை செய்து மிகவும் பொறுமையாக யோசித்து பதில் அளித்தார்.. இதற்கிடேயே அவங்க லிஸ்ட்ல என் பெயர் இல்லையே  என கிண்டலாகவும் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். 

இது ஒரு பக்கம் இருக்க டி.ராஜேந்தரைப் போல நடிகர் சிம்பு மிகவும் நல்லவர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ஸ்ரீ ரெட்டி.