sri reddy again started her protest to get the id

மீண்டும் போரட்டத்தில் குதித்த ஸ்ரீ ரெட்டி...! இப்ப என்ன பிரச்சனை தெரியுமா..?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி ஏற்கனவே போராட்டத்தில் குதித்து தெலுங்கு திரை உலகையே ஆட்டி படைத்தார்

இந்நிலையில் மீண்டும் ஒரு போராட்டத்தில் குதித்து உள்ளார் ஸ்ரீ ரெட்டி.அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என தோன்றுகிறதா...?

ஆம்... தெலுங்கு பட உலகில் நடிக்க வரும் பெண்களை, படுக்கைக்கு அழைப்பது வாடிக்கையாக வைத்து உள்ளனர்.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைவரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்தார்.

இதற்காக நடிகர் சங்கம் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அதன் பின்னர் தன்னை யாரெல்லாம் படுக்கைக்கு அழைத்தார் என்ற விவரத்தை , அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டு ஆதாரத்துடன் தெரிவித்து இருந்தார் ..

அந்த வகையில் அடுத்து வேறு யாருடன் எடுத்த போட்டோ வெளிவர உள்ளதோ என்ற ஆவல் கிளம்பும் அளவிற்கு இருந்தது அவரது அதிரடி நடவடிக்கை.

இவர், இது போன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதால் அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க கூடாத அளவிற்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டையை வழங்க கூட மறுத்து விட்டது சங்கம்.

மேலும் படத்தில் நடிக்க தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் இவருக்கு ஆதரவாக மகளிர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் ஸ்ரீ ரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது நடிகர் சங்கம்.

ஆனால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டையை தராமல் காலம் தாழ்த்தி வருவதால் மீண்டும் எரிச்சலான ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.