ஜூன் 23 ஆம் தேதி,  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில் சரத்குமார் - ராதாரவி அணியினரை எதிர்த்து, பாண்டவர் அணி என்கிற பெயரோடு களமிறங்கினர் நாசர் தலைமையிலான அணியினர். இம்முறையும் நடிகர் சங்க பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர்.

இவர்களுக்கு எதிராக சுவாமி சங்கரதாஸ் அணி என்கிற பெயரில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் மற்றும் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரஷாந்த்தும் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில், பாண்டவர் அணியிக்கு சப்போர்ட் செய்த பலர் தற்போது சுவாமி சங்கரதாஸ் அணிக்கு  தங்களுடைய முழு ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

இரு அணியை சேர்ந்தவர்களும், நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் வாக்குகளை வாங்க பெற தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல், நடிகர் விஷாலை வச்சி செய்து வருகிறார் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி. குறிப்பாக தன்னுடன் நடித்த நடிகைகளை கூட விட்டு வைக்கத்தவர் விஷால், என பதிவிட்டு பகீர் கிளப்பி வருகிறார். 

"நடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார் என்பது தனக்கு தெரியும். அவருக்கு தைரியம் இருந்தால், அவர் எந்த பெண்ணையும் ஏமாற்ற வில்லை என்பதை நிரூபிக்கட்டும் என சவால் விடும் தொனியில் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. விஷால் ஒரு ஏமாற்றுவாதி என்றும் தன்னுடைய தாய் மற்றும் செய்யும் தொழில் மீது சத்தியம் செய்து கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கூறுவதால் விஷால் தன் வாழ்க்கையை அழித்தாலும் பரவாயில்லை, தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை, ஆனால் விஷால் ஒரு ஏமாற்றுவாதி என்பதை தைரியமாக சொல்வேன்' என்று பதிவிட்டுள்ளார்.

விஷால் தனது படங்களில் நடிக்கும் பல பெண்களுடன் தனிமையில் இருந்துள்ளார், அவருக்கு ஒற்றுழைத்த பெண்கள் இன்று, நல்ல நிலையில் உள்ளனர். விஷால் பணம் கொடுத்து உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் யார் யார் என்பதும், அவருக்கு பெண்களை யார் சப்ளை செய்வதும் யார் யார் என்பதும் தனக்கு தெரியும் என்று தனது முகநூல் பதிவில் படுமோசமாக ஸ்ரீரெட்டி விளாசியுள்ளார். மேலும் அவருக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் என்பதும் ஸ்ரீரெட்டியின் கோரிக்கையாக இருக்கிறது.