sri reddy about actor rajasekar issue
ஸ்ரீலீக்ஸ் நடிகை பல முன்னணி நடிகர்களின் திரைக்கு பின்னால் ஒளிந்துள்ள மற்றொரு முகத்தை கிழித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழகத்தில் பிறந்து, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் டாக்டர் ராஜசேகர் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார். இது குறித்து பல்வேறு ஊடகங்களிலும் சர்ச்சையான தகவல்களை வெளியிட்டது. 
நடிகர் ராஜசேகர் குறித்து ஸ்ரீ ரெட்டி கூறுகையில் " பிரபல நடிகர் ராஜசேகருக்காக அவருடைய மனைவியும், நடிகையுமான ஜீவிதாவே பல இளம் பெண்களை இவருக்கு சப்ளே செய்து வருவதாக தெரிவித்தார்".
ஸ்ரீ ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு, பதில் கொடுத்த ஜீவிதா, வன்மையாக இவரை கண்டித்தும்... மோசமான வார்த்தைகளாலும் திட்டினார்.

ஆனால் ஸ்ரீ ரெட்டி இவரின் கடுமையான வார்த்தைகளை சற்றும் பொருட்படுத்தாமல். எதையும் ஆதாரம் இல்லாமல் நான் கூறவில்லை விரைவில் இதன் ஆதாரத்தை வெளியிடுவேன் என கூலாக கூறியள்ளார். இவர் இப்படி கூறியுள்ளதால் இருவரில் யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
