நடிகை ஸ்ரீதேவி, இந்த உலகில் இருந்து மறைந்தாலும், ரசிகர்களின் மனதை விட்டு இன்னும் அவர் மறையவில்லை. என்பதற்கு தற்போது சீனாவில் வெளியாகி 100 கோடி வசூல் சாதனை செய்த 'மாம்' திரைப்படமே ஒரு சாட்சி.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு, அவருடைய குடும்பத்தினர் மனதில் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் மெல்ல மெல்ல ஸ்ரீ தேவியின் கணவர் மற்றும் மகள்கள்,  ஸ்ரீதேவியின் நினைப்பில் இருந்து மீண்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் சீனாவில் வெளியாகியாது.  அங்கு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது மட்டும் இன்றி, 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது .  இதனால் சீனாவில் உள்ள ரசிகர்கள் .#SrideviScoresCentury என்ற ஹாஷ் டாக் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

 

இதற்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் சமூக வலைத்தளத்தில், மிகவும் உருக்கமாக தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.