கடந்த பிப்ரவரி மாதம் 24 தேதி, குடும்ப நண்பர் திருமணத்திற்காக சென்ற பொது 'எமிரேட்ஸ் டவர்' என்கிற நட்சத்திர ஓட்டலில் பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக மாறியவர், பின் பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற மிக உயரிய இடத்தை பிடித்த இவர் முழு நேர பாலிவுட் நடிகையாகவே மாறினார். 

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்ட பிறகும் சில படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவேளைக்கு பின் 'இங்கிலீஷ் விங்லீஷ்", திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடந்து தமிழில் நடிகர் விஜய் நடித்த 'புலி' படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பேசப்படும் விதத்தில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவர் தன்னுடைய கணவர் தயாரிப்பில் கடந்த ஆண்டு நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'மாம்' தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. தற்போது இந்த படத்திற்காக தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.