‘குஷி’ என்பது பெயரில் மட்டும் இருந்தால் அது பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி தனது அபாயகரமான படங்களை பொதுவெளிகளில் தொடர்ந்து வெளியிட்டு வாலிப வயோதிக அன்பர்கள் மத்தியில் படபடப்பை உண்டாக்கி வருகிறார்.

இங்கே தரிசனமாகக் கிடைப்பது காந்தி ஜெயந்திக்கு முந்தைய இரவு அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டவை.

’இந்திப்படங்களில் நடிப்பது அல்ல.சர்வதேச மாடல் ஆவதே எனது விருப்பம்’ என்று உதார் விட்டு வரும் குஷியின் உண்மையான நோக்கம் முதல் படமே ஆமிர்கான் அஜய்தேவ்கன் போன்ற ஹாட் ஹீரோக்களுடன் நடிக்கவேண்டும் என்பதே. அதற்காகத்தான் இப்படி சூடான படங்களை வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள். தவிர தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி ஜானவியுடன் ஒரு பார்ட்டியையும் விட்டுவைக்காத குஷி பார்ட்டிகளுக்கு வரும்போது மேற்படியை விட சிக்கலான காஷ்ட்யூம்களில் வந்து கலங்கடிக்கிறாராம்.

[ ‘ எனது மகள் குஷி இருக்கிறாளே அவளைப்போல் ஒரு குழப்பவாதியை நீங்கள் பார்க்க முடியாது. காலையில் டாக்டருக்குப் படிக்கப்போகிறேன் என்பாள். அன்று மாலையே லாயராகப்போகிறேன்என்பாள். மறுநாள் இண்டர்நேஷனல் மாடல் ஆகப்போகிறேன் என்பாள். அவள் அடுத்து என்னவாக விரும்புகிறாள் என்கிற திருப்பங்கள் வரவர திகட்டிவிட்டன’ -ஒரு பேட்டியில் மறைந்த ஸ்ரீதேவி]
Attachments area