sri devi biography movie
நடிகை ஸ்ரீ தேவி:
தமிழ் சினிமாவில் 4 வயதிலேயே இயக்குனர் எம்.ஏ.திருமுகன் இயக்கிய 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இதை தொடர்ந்து நடிகர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா உள்ளிட்ட பலரது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின் தன்னுடைய 13வது வயதில் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. பின் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தார். 
பல மொழியில் ஸ்ரீ தேவி:
ஸ்ரீ தேவி அறிமுகமானது தமிழ் மொழியாக இருந்தாலும் அதைத்தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்தார். இவருக்கு கோலிவுட் திரையுலகத்தில் உள்ளது போலவே பாலிவுட் மற்றும் பிர மொழிகளிலும் பல தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
ஆவணப்படம்:
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகிறது. பெங்களுரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்குகிறார்கள். இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்காக ஸ்ரீதேவியிடமும் அவருடைய கணவர் போனி கபூரிடமும் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்து பாகங்களாக எடுக்கப்பட உள்ள இந்த ஆவணப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஆவணப்படத்தில் வருபவை:
இந்த ஆவணப்படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த முன்னணி நடிகர்கள், ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்மூட்டி, அம்பரீஷ் உட்பட அணைத்து மொழி நடிகர் நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டிப் பேசும் கருத்துக்கள் இடம்பெற உள்ளது.
மேலும் இவருடைய படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் பேட்டியும் இதில் இடம்பெற உள்ளதாம்.
அதே போல் ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், வாங்கிய விருதுகள் குடும்பம் உள்பட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம் பெரும் என கூறப்படுகிறது.
