ஏ.ஆர் முருகதாஸ், இயக்கத்தில் உருவான ‘ஸ்பைடர்’ படம் ரூ.160 கோடிக்கு விலை போனது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. ஒரேயொரு டூயட் பாடல் தவிர இந்த படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது நடிகர் மகேஷ் பாபு ‘பாரத் அனி நேனு’ படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளபோதும் அவ்வப்போது ‘ஸ்பைடர்’ பாடல் காட்சிகளில் மகேஷ்பாபு நடித்து வந்தார்.

இந்த நிலையில், ஸ்பைடர் படத்தின் மீதியுள்ள டூயட் பாடலை ருமேனியா நாட்டில் படமாக்குகிறார்களாம். ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் மகேஷ்பாபு - ராகுல்பிரித்சிங் ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர்.

மேலும், படத்தில் மகேஷ் பாபு புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார். படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ரூ.160 கோடிக்கு விற்பனையானதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.