spyder box office collection

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஸ்பைடர். 

தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. நேற்று முன் தினம் வெளியாகிய ஸ்பைடர் திரைப்படம், முதல் நாளில் மட்டும் 51 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக ஸ்பைடர் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. 

இந்த வார இறுதிக்குள் வசூல் 100 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பைடர் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஸ்பைடர் திரைப்படம் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை சமமாக பெற்றுவரும் போதிலும் வசூல் மழையில் நனைந்து வருகிறது.