சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு,  உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து கொண்டு, நலம் பெற்று மீண்டும் சென்னை திரும்பினார். அவருடைய உடல் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பலர் பல்வேறு வழிபாடுகள், மற்றும் விரதம் இருந்தனர்.

இந்த நிலையில் சிங்கபூரில் இருந்து, ரஜினிகாந்த் நாடு திரும்பி நேற்றுடன் 8 வருடங்கள் ஆகிறது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.  

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், சிங்கப்பூரில் இருந்து நானும் அப்பாவும் சென்னைக்கு திரும்பி வந்தபோது ரசிகர்களின் கரகோஷத்தை என்னால் மறக்கவே முடியாது... அப்பா, நீங்கள் உண்மையில் கடவுளின் குழந்தை என்று செளந்தர்யா பதிவிட்டு, ரஜினிகாந்த் வெளிநாட்டில் இருந்து வந்த போது, ஆரவாரம் செய்த ரசிகர்களின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.