Spider released online Despite the hazardous hunt ...
மகேஷ்பாபுவின் நடிப்பில் கடந்த வெளியான ஸ்பைடர் படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன்லைனில் வெளியான போதிலும் வசூல் வேட்டை ஆடியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்த படம் ஸ்பைடர்.
இந்தப் படம் கடந்த புதன்கிழமை உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், விமர்சனகளும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
ஒருபக்கம் ஆன்லைனில் வெளியானாலும் இந்தப் படம் வசூல் வேட்டை ஆடியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆம், இப்படம் உலகளாவிய வெளியீட்டு உரிமையின் மூலம் ரூ.124 கோடி வசூல் செய்துள்ளது.
திங்கள்கிழமை வரை விடுமுறை என்பதால் நிச்சயம் இந்தப்படமும் நல்லா வசூலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
