Special Stories about kamal Hassan Daughters
வாரிசு வரவுகள் அரசியல் போல் சினிமாவிலும் சகஜம்தான். ஆனால் அரசியல் மேடையில் தலைவர்களுடன் அவர்கள் வாரிசுகள் இணைந்து அமர்கையில் அது பெரிய ஆர்ப்பரிப்பையோ, எதிர்பார்ப்பையோ ஏற்படுத்துவதில்லை. ஆனால் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்களில் அவர்களின் வாரிசுகள் ஒரு சீனில் தோண்றுவதாக இருந்தாலும் பரபரப்பு பற்றிக் கொண்டு எரியும். அப்படியொரு ஹாட் நியூஸ் இது!
கமலின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் தலைகாட்டிய உடன் கேட்கப்பட்ட கேள்வி, ‘எப்ப உங்க அப்பா கூட சேர்ந்து நடிப்பீங்க?’ என்பதுதான். அதற்கு உதட்டை சுளித்த ஸ்ருதி ‘அது நிச்சயம் ஒரு ஆஸம் மொமெண்டாதான் இருக்கும். ஆனால் அப்பாவும், டைமும்தான் அதுக்கு பதில் சொல்லணும்.’ என்றார்.

இதற்கு பின் இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் எதிர்கொண்ட படியே சில வருடங்களில் கணிசமான படங்களை முடித்துவிட்ட ஸ்ருதி வெளிப்படையான இடைவெளிக்கு பிறகே கமலுடன் அவரது சொந்த ஒரு ப்ராஜெக்டில் இணைந்தார். சபாஷ் நாயுடு படத்தில் கமலுடன், ஸ்ருதியும் நடிக்கிறார். அமெரிக்காவில் லாங் ஷெட்யூலை முடித்து திரும்பிய இந்த க்ரூ அடுத்த ஷெட்யூலுக்காக தயாரான நேரத்தில்தான் கமலுக்கு நடந்த விபத்தால் காத்திருந்தது. இப்போது மீண்டும் கியர் அப் ஆகியிருக்கிறது.
இந்நிலையில் அக்காவை போலில்லாமல் ஃபீல்டுக்கு வந்த இந்த சின்ன காலத்திற்குள்ளாகவே அக்ஷரா தனது அப்பாவுடன் இணைகிறார் என்று ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் நெருக்கமான நபர்களே கதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அமிதாப், தனுஷ், அஜித் என்று ஆளுமையான நடிகர்களுடன் விறுவிறுவென கமிட் ஆகிய அக்ஷரா சட்டென அடுத்த தாவலில் உலக நாயகனின் ப்ராஜெக்டிலும் கால்வைக்கிறாராம்.
ஸ்ருதி அளவுக்கு அக்ஷரா ஃப்ரீக்கி இல்லை. கொஞ்சம் சென்சிடீவ் பார்ட்டி. எதிலும் வலுவான கண்டண்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கேர்ள். அதாவது அப்பாவை போல.
ஆக இந்த இரண்டு ஷார்ப் பர்ஷனாலிட்டிகளும் இணைந்தால் அந்த ப்ராஜெக்டின் கரு செம கனமானதாகதானே இருக்கும்! யெஸ் மாவோயிஸம், நக்சல்பாரி அமைப்புகளின் வாழ்வியல் மற்றும் போராட்ட விதம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றை கருவாக கொண்டு அந்தப்படம் உருவாக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற ஆனால் சற்றே அழுத்தமானதாக அந்த தகவல்கள் கசிகின்றன.

இந்த ப்ராஜெக்டில் அப்பா_மகளாகவோ அல்லது எதிரெதிர் துருவங்களாகவோ இருவரும் நடிக்கலாம் என்கிறார்கள். அக்ஷராவுக்கு இந்த படத்தில் அப்பாவுக்கு நேர் எதிரான கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கவே விருப்பமாம். காரணம், அப்போதுதான் சவாலான அனுபவத்தை பெற்று தன்னை செதுக்கிக் கொள்ள முடியுமென்று நினைக்கிறார்.
குருதிப்புனல், ஹேராம், விஸ்வரூபம் 1 மற்றும் 2 ஆகியவற்றின் மூலம் சென்சிடீவ் சப்ஜெக்ட்களை நேர்த்தியாக கையாள பழகியிருக்கும், கமலே இந்த படத்துக்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஏற்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
வலுவா ஒரு விசிலடிக்கலாமா!
