தல படத்தில் முதல்முறையாக சேரும் போஸ்... இனி ஏன் படத்தில் அது இருக்காது சிவா பளீர்...

'விவேகம்' படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் தான் கொடுத்த வாக்கை தவறவில்லை தல அஜித் மீண்டும் தன்னுடைய அடுத்த படத்தையும் சிவாவுடன் தான் என்று முடிவு செய்துவிட்டார்.

கடந்த சில வருடங்களாக படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து சில நாட்கள் கழித்தே பட டைட்டில் வெளியிடும் தல அஜித் இந்த படத்திற்கு படபிடிப்பை தொடங்கும் முன்பே  டைட்டிலை 'விசுவாசம்' என்று அறிவித்துவிட்டது. நடிகர்களின் தேர்வுக்குப் பின் படப்பிடிப்புக்கு தயாராகும் நிலையில் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டது. 

இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் நடிக்கவிருக்கிறார். அஜித் படத்தில் இவர்  நடிப்பது இதுதான் முதல்முறை.

“இனி ஏன் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இப்படத்தில் இருக்காது” – சிவா

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் காரணம் வியாபார ரீதியாகவும் ரசிகர்கள் கூட்டமும் அவருக்கு அதிகம் காரணம் தொடர் வெற்றிகள் இது தான் இவரின் ரகசியம். இவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்பதை நினைத்தால் பலருக்கும் ஒரு உத்வேகமாக தான் இருக்கும். திறமைகள் இருந்தாலும் சில தடைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.

தற்போது அவரை வைத்து படம் தயாரிக்க பலரும் முன்வருகிறார்கள். இந்த வருடம் தனக்கு மூன்று படங்கள் வர இருப்பதாக அவரே கூறியிருந்தார். பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் சமந்தா தான் அவருக்கு ஜோடி. இப்படத்தின் பிரஸ் மீட் முன்பு நடைபெற்றது.

இதில் பேசிய சிவா மது அருந்தும் காட்சிகள் இப்படத்தில் இருக்காது என கூறினார். அதுமட்டுமல்ல இனி நான் நடிக்கப் போகும் படங்களிலும் இருக்காது என தெரிவித்துள்ளார்.

பேய் வேஷம் போடும் நயன்...

‘மாயா’, ‘டோரா’ படங்களைத் தொடர்ந்து மறுபடியும் பேய்ப் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா என்கிறார்கள்.  புரோசித் ராய் இயக்கத்தில் வெளியான ஹிந்திப் படம் ‘பரி’. அனுஷ்கா சர்மா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம், சூப்பர் நேச்சுரல் ஹாரர்  வகையைச் சார்ந்தது. இந்தப் படத்தை அனுஷ்கா சர்மாவே தயாரித்துள்ளார். 

இந்தப் படம், விரைவில் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஹீரோயினாக முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் அந்த கேரக்டரில்  நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம். ஏற்கெனவே ‘மாயா’, ‘டோரா’ என பேய்ப் படங்களில் நடித்துள்ளார் நயன்.

விஜயை பார்த்து வியந்த சம்மு...

விஜய் சேதுபதியின் நடிப்பைப் பார்த்து வியந்து விட்டாராம் சமந்தா. ‘ஆரண்ய காண்டம்’ படத்தை அடுத்து  தியாகராஜன் குமாரராஜா தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது பல இடங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார் சமந்தா. குறிப்பாக, திருநங்கை “ஷில்பா” கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அந்த கேரக்டரைப் பார்த்து வியந்து வியந்து போனாராம் சம்மு.