Special Article about thalapathy vijay mersal
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருக்கும் படம் தான் மெர்சல். இப்படத்தில் ஏராளமான சிறப்பு மற்றும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான், சமந்தா, காஜல் அகர்வால் என மூவருமே மூன்றாவதுமுறையாக இணைந்திருக்கிறார்கள். அட்லீ இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள்.

இப்படம் மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. மெர்சல் படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்துள்ளது. விஜயை குஷி படத்தின்மூலம் ஸ்டாலிஸாக காட்டிய எஸ்.ஜே சூர்யா விஜய்க்கு வில்லனாக களமிறங்கியுள்ளார்.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என வைராக்கியமாக இருந்த வடிவேலு நடித்துள்ளார். அதுமட்டுமல்ல வடிவேலுவின் ஆஸ்தான ஜோடி கோவை சரளா ஜோடியாக நடித்துள்ளார்.
அடுத்ததாக படத்தின் கரு என எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டின் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டு பிரச்சனையை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்திய சினிமாவின் பிரமாண்ட திரைப்படத்தின் வசனகர்த்தவும் இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு வசனம் மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார்.

மூன்று வேடங்களில் அசத்தவிருக்கும் தளபதி காட்சிக்கு காட்சி ரசிகர்களை மெர்சலாக்குவாராம். காதல், ஆக்ஷன், பாசம், மருத்துவ ஊழல் என மொத்த படமும் விறுவிறுப்பாக இருக்குமாம்... இப்படம் இரண்டே முக்கால் மணிநேரம், ரசிகர்களுக்கு பெரிய தீபாவளி ட்ரீட் ஆக இருக்கும். குறிப்பாக இடைவேளை காட்சி மிரட்டலாக இருக்கும்...
