கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியன் உடல் நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என, அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..!
 

பல படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ள பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து அவர்க்கு பலர் போன் செய்து விசாரிக்க துவங்கியதால், லேசான அளவில் மட்டுமே கொரோனா அறிகுறி உள்ளதாக மிகவும் தெளிவாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் இவருடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து அறிக்கை மூலம் தெரிவித்து வந்த, மருத்துவனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட தகவலில் இவருடைய உடல் நிலை கவலை கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்தது. இது உலக முழுவதிலும் உள்ள இவருடைய ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மேலும் செய்திகள்: நெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..!
 

மேலும் இவருடைய உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும் என, நடிகர் விவேக், வடிவேலு, பார்த்திபன்,சிரஞ்சீவி, இளையராஜா, உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களுடைய பிராத்தனைகளை தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் இவருடைய உடல் நிலை குறித்து சில வதந்திகளும் பரப்பபட்டு வருகிறது. அந்த வகையில்... தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபல செய்தி நிறுவனம் தவறான செய்தியை வெளியிட்டதாக கூறிய எஸ்.பி.பி.மகன் சரண், பின்னர் இதுகுறித்து அந்த செய்தி நிறுவனம் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டதாகவும். அந்த செய்தி தொலைக்காட்சி மூலம் வதந்தி பரவவில்லை என தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடைய தந்தையின் உடல் நலம் குறித்து எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.