sp muthuraman speech

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடித்த பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்பி முத்துராமன் பங்கேற்றார். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்...

25 படங்கள் நான் ரஜினியை வைத்து இயக்கி இருக்கிறேன் என்றும் ஒருபோதும், அவர் புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர் என்றும், ரஜினி பழசை மறக்காதவர், தனக்கு தெரிந்து கேமராவுக்கு பின்னால் ரஜினி என்றுமே நடித்ததில்லை என்றும் கூறினார்.

மேலும் எப்போதும் இயக்குனர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பவர் என்றும், ஸ்டைலுடன் ஸ்பீடான நடிப்பை வெளிபடுத்துபவர் ரஜினிகாந்த் என்றும் கூறினார். 

அவரது கண்களே அனைத்தையும் பேசிவிடும், அதே போல அனைவரும் சூப்பர் ஸ்டாரைப் போல ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று கூறிய அவர்.

ரஜினிகாந்தை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும், ரஜினி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் வாழ்த்துவதாக கூறி விடைபெற்றார்.