தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லத்தில் ஏற்பட்டுள்ள சோகம் அவரது குடும்பதினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. 

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். கடைசியாக இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலையும் பாடியவர். இவரது தாயார் சகுந்தலாம்மா இன்று அதிகாலை மரணமடைந்தார். 

83 வயதான அவர் கடந்த சில மாதங்களாக முதுமையாலும், உடல்நலக் கோளாறாலும் சிகிச்சை பெற்று வந்தார். எஸ்.பி.பியின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள நகரியில் அவர் வசித்துப் வந்தார். லண்டன் சென்றுள்ள எஸ்.பி.பி தனது தாயார் சகுந்தலாம்மா மறைந்த தகவலை அறிந்து இன்று மாலை நெல்லூர் திரும்புகிறார். சகுந்தலாம்மாவின் இறுதிச்சடங்குகள் நாளை நெல்லூரில் நடைபெறுகிறது. 

சகுந்தலாம்மாவின் இறுதிச்சடங்கில் திரையுலகை சேர்ந்த பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.