பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து பாடும் நிலா எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

 

இந்நிலையில் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டதாக இன்று காலை அறிக்கை ஒன்று வெளியானது.  அதில் அப்பாவின் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்தவர்களுக்கும், கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

 

 

இதையும் படிங்க: ட்விட்டரில் இணைந்தாரா விஜய் மகள்?.... நன்றி சொல்லி சாந்தனு போட்ட ட்வீட்டால் வெளியான குட்டு...!

ஆனால் எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று குணமாகிவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என எஸ்.பி.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தினமும் நான் மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு  அப்பாவின் உடல் நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறேன். ஆனால் இன்று காலை திடீரென அப்பாவிற்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளதாக வதந்தி பரவியது. ஆனால் இப்போது வரை அவர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பாவின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது, அதனால் அவருடைய நுரையீரல் பிரச்சனை விரைவில் குணமடையும் என்று நம்புகிறோம். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று மாலை மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு அப்பாவின் உடல் நிலை குறித்து நானே தகவலை வெளியிடுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

 

 

இதையும் படிங்க: மொட்டை மாடியில் மூத்த மகனுடன் பஞ்சாயத்து செய்த தனுஷ்... வைரலாகும் போட்டோவிற்கு பின்னால் உள்ள கதை தெரியுமா?

தற்போது எஸ்.பி.பி-யின் உடல் நிலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து ஐசியூவில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன்  அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவரை எங்களது நிபுணர் மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது” என தெரிவித்துள்ளனர்.