தலைவர் சூப்பர் ஸ்டார் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பான 70 ஆவது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.

குறிப்பாக நேற்று நள்ளிரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள, போயஸ் தோட்டத்தில் கூடிய ரஜினி ரசிகர்கள் மிக பிரமாண்டமான கேக் வெட்டி ஆரவாரம் செய்து கொண்டி மகிழ்ந்தனர்.

மற்றொரு புறம், பிரபலங்கள் பலரும் தலைவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும், சூப்பர் ஸ்டாரின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ட்விட்டர் பக்கத்தில் தந்தைக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  "என் வாழ்க்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் தந்தை, மற்றும் எல்லாமே நீங்கள் தான் என கூறி, தனக்கு பிடித்த மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த ட்விட் இதோ...