சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது என்றால் அவரின் தனித்துவமான ஸ்டைல் தான். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது என்றால் அவரின் தனித்துவமான ஸ்டைல் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவர் நடப்பது, நிற்பது, பேசுவது, கையசைப்பது, அமர்வது என அனைத்திலும் ஒரு ஸ்டைல் இருக்கும்.

இவரின் ஸ்டைல் யாருக்கு வருமோ.. வராதோ... இவரின் பேரன்களுக்கு மிகவும் சுலபமாக வந்து விடுகிறது. சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா மகன் யாத்ரா, மிகவும் ஸ்டைலிஷாக கண்ணாடி போட்டுக்கொண்டு சொந்தர்யாவின் திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது சௌந்தர்யா, அவருடைய மகன் வேத் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய அப்பாவின் ஸ்டைலில் மகனும் வளர்வதாக கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தில் வேத், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, காரில் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த்... அவனுடைய ரத்தத்தில் ஸ்டைல் உள்ளது என்று நினைக்கிறேன், 'அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்' என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Scroll to load tweet…